2011-12 ஆம் ஆண்டு அடிப்படை என்பதில் இருந்து 2022-23-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக மொத்த விற்பனை விலை குறியீட்டு எண்ணின் தற்போதைய தொடர் திருத்தத்துக்கான பணிக்குழுவை அமைப்பதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
கீழ்க்கண்டவாறு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது:
1) பேராசிரியர் ரமேஷ் சந்த், உறுப்பினர், நிதி ஆயோக், குழுத் தலைவர்
2) கூடுதல் தலைமை இயக்குநர், கள நடவடிக்கைப் பிரிவு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம்- உறுப்பினர்
3) துணைத் தலைமை இயக்குனர், பொருளாதார புள்ளியியல் பிரிவு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் – உறுப்பினர்
4) துணை தலைமை இயக்குநர், தேசிய கணக்குப் பிரிவு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் – உறுப்பினர்
5) துணை தலைமை இயக்குநர், தொழில் கணக்கெடுப்பு பிரிவு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் – உறுப்பினர்
6) பொருளாதார ஆலோசகர், பொருளாதார விவகாரங்கள் துறை, உறுப்பினர்
7) ஆலோசகர், விலை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை – உறுப்பினர்
8) மூத்த பொருளாதார ஆலோசகர், நுகர்வோர் விவகாரங்கள் துறை- உறுப்பினர்
9) துணைத் தலைமை இயக்குநர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் – உறுப்பினர்
10) தலைமை நிர்வாக அதிகாரி, சரக்கு மற்றும் சேவைகள் வரிக் கட்டமைப்பு – உறுப்பினர்
11) இந்திய ரிசர்வ் வங்கி பிரதிநிதி – உறுப்பினர்
12) டாக்டர் சவுமியா கந்தி கோஷ், தலைமைப் பொருளாதார நிபுணர், எஸ்பிஐ குழுமம் – உறுப்பினர்
13) டாக்டர் சுர்ஜித் பல்லா, பொருளாதார நிபுணர் – உறுப்பினர் (அலுவல் சாராதவர்)
14) டாக்டர் ஷமிகா ரவி, உறுப்பினர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு – உறுப்பினர் (அலுவல் சாராதவர்)
15) டாக்டர் தர்மகீர்த்தி ஜோஷி, தலைமை பொருளாதார நிபுணர், கிரிசில் -உறுப்பினர் (அலுவல் சாராதவர்)
16) திரு நிலேஷ் ஷா, நிர்வாக இயக்குனர், கோடக் மஹிந்திரா சொத்து மேலாண்மை -உறுப்பினர் (அலுவல் சாராதவர்)
17) இந்திரனில் சென்குப்தா, இணைத் தலைவர் மற்றும் பொருளாதார நிபுணர், பாங்க் ஆஃப் அமெரிக்கா மெரில் லிஞ்ச் – உறுப்பினர் (அலுவல் சாராதவர்)
18) துணைத் தலைமை இயக்குநர், தொழில்துறை மேம்பாடு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை (உறுப்பினர் செயலாளர்) – உறுப்பினர்.
திவாஹர்