2024-ம் ஆண்டில் நிலக்கரித் துறை இதுவரை இல்லாத அதிகபட்ச உற்பத்தி மற்றும் விநியோகத்தை எட்டியுள்ளது

நிலக்கரி அமைச்சகம் 2024 காலண்டர் ஆண்டிற்கான நிலக்கரி உற்பத்தி மற்றும் விநியோகத்தில் மிகச் சிறப்பான  முன்னேற்றத்தைப் பதிவுசெய்துள்ளது. எரிசக்தி பாதுகாப்பை அடைவதில் அதன் அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதுடன், தற்சார்பு  இந்தியா பார்வைக்கும் உதவியுள்ளது.

2024 ஆம் ஆண்டில், நிலக்கரி உற்பத்தி 1,039.59 மில்லியன் டன்னாக   (தற்காலிகமானது) இருந்தது. இது முன்பு இல்லாத அளவுக்கு அதிகமாகும்.  இது முந்தைய ஆண்டின் மொத்த 969.07 மில்லியன் டன்னுடன்  ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க 7.28% வளர்ச்சியைக் குறிக்கிறது. இந்த வளர்ச்சியானது உள்நாட்டில் நிலக்கரி கிடைப்பதை அதிகரிக்கவும், வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யவும் அமைச்சகத்தின் உத்திசார்  முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது.

இதேபோல், 2024 -ம் ஆண்டில் அனுப்பப்பட்ட  நிலக்கரியின் அளவு , 1,012.72 மெட்ரிக் டன் (தற்காலிகமானது)  ஆகும்.  நாடு முழுவதும் அனுப்பப்பட்டு, 2023 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 950.39 மெட்ரிக் டன்னை (6.56% )விஞ்சி சாதனை படைத்தது. உற்பத்தி மற்றும் அனுப்புதல் ஆகிய இரண்டிலும் இந்த நிலையான வளர்ச்சியானது, மின் உற்பத்தி மற்றும் பிற தொழில்களுக்கு நிலக்கரி சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதிசெய்து, தேசிய எரிசக்தி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் துறையின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகிறது.

நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்துதல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றில் அமைச்சகம் தொடர்ந்து கவனம் செலுத்துவது, நிலக்கரி இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல், நாட்டின் தன்னிறைவை வலுப்படுத்துதல், நீண்டகால நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் நோக்கம் ஆகியவற்றுடன்  ஒத்துப்போகிறது.

Leave a Reply