இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தவும், உள்நாட்டு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், இந்திய விமானப்படை தொழில்துறை தொழில்துறை சந்திப்பு நிகழ்வு 2025- ஐ ஏற்பாடு செய்கிறது. இந்த நிகழ்வை இரண்டு நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டம் 13 ஜனவரி 2025 அன்று இணையதளம் மூலம் நடத்தப்படுகிறது. இரண்டாம் கட்டத்தை 15 ஜனவரி 2025 அன்று குவஹாத்தி விமானப்படை நிலையத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐஓஇ 25 எனப்படும் இந்த சந்திப்பு பாதுகாப்பு தொழில்துறையினர், கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்களை இந்திய விமானப்படையுடன் இணைப்பதற்கான ஒரு முக்கியமான தளமாக செயல்படும்.
இது பாதுகாப்பில் புதுமையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. தற்சார்பு பாதுகாப்பு சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முயற்சிகளையும் இது எடுத்துக்காட்டுகிறது.
திவாஹர்