சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு, இன்று அஜ்மீரில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி புனித ஸ்தலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சார்பாக புனித சால்வையை வழங்கினார். நல்லிணக்கம், ஆன்மிகம் மற்றும் பக்தி ஆகியவற்றைக் குறிக்கும் நிகழ்வான சிறந்த சூஃபி துறவியை நினைவுகூரும் ஆண்டு உர்ஸ் என வழங்கப்படுகிறது.
இந்தப் புனிதமான விளக்கக்காட்சியுடன் இணைந்து, தர்காவிற்கு வருகை தரும் யாத்ரீகர்களின் அனுபவத்தையும் வசதியையும் மேம்படுத்துவதற்கான பல முயற்சிகளை அமைச்சர் வெளியிட்டார். உர்ஸிற்கான செயல்பாட்டுக் கையேட்டின் வெளியீடு, அதிகாரப்பூர்வ தர்கா இணையப் போர்ட்டலைத் தொடங்குதல் மற்றும் “கரிப் நவாஸ்” செயலியின் அறிமுகம் ஆகியவை இந்த முயற்சிகளில் அடங்கும்.
உர்ஸிற்கான செயல்பாட்டுக் கையேடு, கூட்ட மேலாண்மை, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிற்கான விரிவான நெறிமுறைகளுடன், நிகழ்வின் திறம்பட ஒழுங்கமைப்பை உறுதிசெய்ய வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான வழிகாட்டியாகும்.
கூட்டத்தில் உரையாற்றிய திரு ரிஜிஜு, “குவாஜா மொய்னுதின் சிஷ்டியின் உர்ஸ் என்பது நம்பிக்கை மற்றும் கலாச்சாரத்தின் எல்லைகளைத் தாண்டி மக்களை ஒன்றிணைக்கும் ஒரு தனித்துவமான நிகழ்வாகும். இந்தப் புதிய முயற்சிகள் மூலம், தடையற்ற நிகழ்வின் புனிதத்தை நிலைநிறுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம். பக்தர்களுக்கு இது செழுமையான அனுபவமாக இருக்கும்” என்று கூறினார்.
தர்கா கமிட்டி, தர்கா குவாஜா சாஹேப் நடத்திய நிகழ்வில், விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் இணை அமைச்சர் திரு பகீரத் சவுத்ரியும் கலந்து கொண்டார்.
இந்த முன்முயற்சிகள் குவாஜா கரிப் நவாஸின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன. அதே நேரத்தில் யாத்ரீகர்களுக்கு சிறந்த முறையில் சேவை செய்யும் வகையில், தொழில்நுட்ப முன்னேற்றங்களைத் தழுவுகின்றன.
எம்.பிரபாகரன்