ஐஎன்எஸ் துஷில் செனகலின் டாக்கர் சென்றடைந்தது.

இந்தியக் கடற்படையின் புதிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் துஷில், 03 ஜனவரி 25 அன்று செனகலின் டாக்கர் துறைமுகத்திற்குச் சென்றது. இந்தப் பயணம் செனகலுடனான தற்போதைய உறவுகளை மேலும் வலுப்படுத்தும். மேலும்,  இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்தும்.

ஐஎன்எஸ் துஷில், கேப்டன் பீட்டர் வர்கீஸ் தலைமையில், துறைமுக அழைப்பின் போது பல்வேறு ராணுவ மற்றும் சமூக நிகழ்ச்சிகளில்  ஈடுபடும். மூத்த செனகல் ராணுவம் மற்றும் அரசு அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் அதிநவீன உள்நாட்டு ஆயுதங்கள், சென்சார்கள் மற்றும் கப்பலில் பொருத்தப்பட்ட உபகரணங்களை காட்சிப்படுத்துதல் ஆகியவை இதில் அடங்கும். இந்த கப்பல் பரஸ்பர நன்மை பயக்கும் வழிகளுக்காக இரு கடற்படைகளைச் சேர்ந்த விஷய வல்லுநர்களுக்கு இடையே தொடர்புகளை நடத்துகிறது. பயிற்சியுடன் செயல்விளக்கங்களையும் மேற்கொள்ளும். செனகல் ஆர்வலர்களுக்காக யோகாவின் உற்சாகமான அமர்வும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்திய கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில், கப்பலில் சமூக தொடர்புகளையும் இந்தக் கப்பல் ஏற்பாடு செய்யும்.

மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையின் கடற்பகுதியில் செனகல் கடற்படையுடன் கூட்டு ரோந்து செல்லும். இந்தப் பயிற்சியானது இரு கடற்படைகளுக்கு இடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்தும் அதே வேளையில் பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்துவது மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

செனகல் உடனான உறவுகளுக்கு இந்தியா கொடுக்கும் முக்கியத்துவத்தின் மற்றொரு வலுவான அடையாளம் இதுவாகும். இரு நாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தேடுதலின் மற்றொரு வலுவான அடையாளமாகவும் இது இருக்கும். இரு கடற்படையினரும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதற்கும், ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராய்வதற்கும் இது வாய்ப்பளிக்கும்.

Leave a Reply