துக்ளகாபாத் தளத்தில் பழுதுபார்ப்பு பணிமனையின் விமானப்படை அதிகாரி பொறுப்பை ஏர் கொமடோர் ரிஷி சேத்திடமிருந்து இன்று (2025, ஜனவரி 06 ) ஏர் கொமடோர் டெபாகிநந்தன் சாஹு ஏற்றுக் கொண்டார். பணிமனை பணியாளர்களின் சம்பிரதாய அணிவகுப்புடன் ஒப்படைப்பும் / பொறுப்பேற்பும் நடைபெற்றது.
ஏர் கொமடோர் டெபாகிநந்தன் சாஹு 1994 மே 30 அன்று இந்திய விமானப்படையின் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பிரிவில் நியமிக்கப்பட்டார். அவர் விமானப்படை தொழில்நுட்பக் கல்லூரி, பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரி மற்றும் செகந்திராபாத்தின் விமானப் போர்க் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். அவர் விமான போக்குவரத்து மற்றும் ஆயுத ஏவுகணை அமைப்பு துறையில் தொழில்நுட்ப நிபுணத்துவம் கொண்டவர்.
சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில், ஏர் கொமடோர் சாஹுவுக்கு 2023, ஜனவரி 26 அன்று குடியரசுத் தலைவரால் விஷிஸ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.
திவாஹர்