கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி இன்று (2025 ஜனவரி 06 ) தில்லி கண்டோன்மெண்டில் உள்ள தேசிய மாணவர் படை குடியரசு தின முகாம் 2025 ஐ பார்வையிட்டார். அப்போது பேசிய அவர், தேசிய மாணவர் படையினரின் உயர் தரமான நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். தேசிய மாணவர் படையின் நெறிமுறைகளை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டு செல்லுமாறு அவர்களை அவர் ஊக்குவித்தார். மரக்கன்றுகள் நடும் இயக்கங்கள், ரத்த தான முகாம்கள், புற்றுநோய் தடுப்பு விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி நாட்டைக் கட்டியெழுப்ப பங்களிக்கும் புனீத் சாகர் இயக்கம் போன்ற முன்முயற்சிகளையும் தேசிய மாணவர் படையின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களையும் கடற்படை தலைமைத் தளபதி பாராட்டினார்.
இந்த முகாமில் தேசிய மாணவர் படை வீரர்கள் கடைபிடிக்கும் ஒற்றுமை, ஒழுக்கம், தேசபக்தி, அர்ப்பணிப்பு, சமூக சேவை ஆகிய முக்கிய மதிப்புகள் அவர்களை முன்மாதிரி குடிமக்களாக உருவாக்க உதவும் என்று அட்மிரல் தினேஷ் கே திரிபாதி தெரிவித்தார்.
திவாஹர்