ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் திரு மனோஜ் யாதவா கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பு உண்மையான ரயில் பயணிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல் முடிவாகும் என்றார். நேர்மையற்ற சக்திகளால் டிக்கெட் முறைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுப்பதன் செய்வதன் மூலம், இந்த தீர்ப்பு இந்திய ரயில்வேயின் பயணச்சீட்டு செயல்முறையின் வெளிப்படைத்தன்மையைப் பராமரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என அவர் கூறினார். அனைத்து முறையான பயணிகளுக்கும் பயணச்சீட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கான அதன் பணியில் ஆர்பிஎஃப் உறுதியாக உள்ளது, மேலும் தனிப்பட்ட ஆதாயத்திற்காக அமைப்பை தவறாகப் பயன்படுத்த முயற்சிப்பவர்களுக்கு எதிராக தொடர்ந்து உறுதியாக செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
எந்தவொரு முறைகேடுகளையும் புகாரளிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாகவும் அனைத்து புகார்களுக்கும் உதவி எண் 139 பொதுவானது என்றும். அவர் தெரிவித்தார். ரயில்மதாத் (RailMadad) தளம் மூலமாகவும் புகாரளிக்கலாம் என அவர் கூறினார். அனைவருக்கும் நியாயமான, வசதியான பயண அனுபவத்தை உறுதி செய்வதற்கு ஆர்பிஎஃப் செயல்படுகிறது என அவர் கூறினார்.
உச்ச நீதிமன்றம் 2025 ஜனவரி 9 அன்று ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. பயணச்சீட்டு முறைகளை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறிந்து, உண்மையான பயணிகளுக்கு ரயில் பயணச் சீட்டுகளின் நியாயமான அணுகலை உறுதி செய்தது. ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்வது ஒரு சமூக குற்றம் என்று கூறிய உச்ச நீதிமன்றம், கொள்முதல், விநியோக முறையைப் பொருட்படுத்தாமல், அங்கீகரிக்கப்படாத ரயில் டிக்கெட்டுகளை கொள்முதல் செய்வது, வழங்குவது குற்றமாகும் என்று கூறியது.
கேரளா, சென்னை உயர்நீதிமன்றங்களின் தீர்ப்புகளை எதிர்த்து இரயில்வே அமைச்சகம் தாக்கல் செய்த சிறப்பு முறையீட்டு மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.
திவாஹர்