மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவின் முதல் சிஎஸ்ஐஆர் மெகா “புதுமைக் கண்டுபிடிப்பு வளாகத்தை” 2025 ஜனவரி 17 அன்று மும்பையில் காணொலி முறையில் திறந்து வைத்து, அதை புத்தொழில் நிறுவனங்கள், தொழில்துறையினருக்கு அர்ப்பணித்தார்.
அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்பு வளாகம், ஒன்பது தளங்களில் 24 ஆய்வகங்களுடன் புதுமையான கட்டமைப்புகளுடன் கூடிய ஒரு பெரிய அதிநவீன அமைப்பாகும்.
இந்த வளாகத்தில் உலகத் தரம் வாய்ந்த தொழில் பாதுகாப்பு ஆய்வகங்கள், புதுமையான ஸ்டார்ட்-அப்களுக்கான ஐபி / வணிக மேம்பாட்டு ஆதரவு, சிஎஸ்ஐஆர் ஆய்வகங்கள் உள்ளிட்டவை உள்ளன.
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், புதிய தொழில்கள், புதிய கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
எம்.பிரபாகரன்