குடியரசுத் துணைத் தலைவர் நாளை (2025 ஜனவரி 21) சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூருக்கு பயணம்.

குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் நாளை (2025 ஜனவரி 21)  சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பயணம் மேற்கொள்கிறார்.

ராய்ப்பூரில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் (என்.ஐ.டி), பிலாயில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், ராய்ப்பூரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.எம்) ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுடன் “சிறந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கருத்துக்கள்” என்ற தலைப்பில் நடைபெறவுள்ள கலந்துரையாடல் அமர்வுக்கு குடியரசுத் துணைத் தலைவர் தலைமை தாங்குகிறார்.

Leave a Reply