தேசிய மாணவர் படையினர் இந்தியாவின் சொத்துக்கள், அவர்கள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் பார்வையை நனவாக்க முயற்சிக்க வேண்டும்: என்.சி.சி குடியரசு தின முகாம் 2025-ல் பாதுகாப்பு அமைச்சர்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையை நனவாக்க கடுமையாகப் பாடுபட வேண்டும் என்று தேசிய மாணவர் படையினரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.  இன்று தில்லி கண்டோன்மெண்டில் நடைபெற்ற என்.சி.சி குடியரசு தின முகாமில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர், தேசிய மாணவர் படையினர் அவர்கள் சேவையாற்றும் துறைகளுக்கு இடையே, என்.சி.சி அவர்களுக்கு கற்றுக்கொடுத்த ‘தலைமைத்துவம்’, ‘ஒழுக்கம்’, ‘லட்சியம்’,’தேசபக்தி’ ஆகியவற்றின் மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் பங்காற்றுகிறார்கள் என்று அமைச்சர் கூறினார்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்ற பிரதமர் மோடி உறுதிமொழி எடுத்துள்ளதாகவும், அவரும் என்.சி.சியில் இருந்ததாகவும் அமைச்சர் எடுத்துக் கூறினார். எனவே, என்.சி.சியைச் சேர்ந்த முன்னாள் பிரதிநிதி ஒரு கனவைக் கண்டால், அதை நிறைவேற்றுவது மற்ற அனைத்து தேசிய மாணவர் படையினரின் மிகப்பெரிய பொறுப்பாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தேசிய மாணவர் படை வீரர்களின் அர்ப்பணிப்பு, ஒழுக்கம், நாட்டின் மீதான அன்பு ஆகியவற்றிற்காக பாதுகாப்பு அமைச்சர் அவர்களைப் பாராட்டினார். ஒரு நாடாக இந்தியா சாதிக்க முடிந்ததற்கு ஒவ்வொருவரின், குறிப்பாக இளைஞர்களின் கடின உழைப்பே காரணம் என்று திரு ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். .

Leave a Reply