நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு நிறுவனங்களின் இளம் தலைவர்கள் அமைப்பின் சர்வதேச தூதுக்குழு பிரதிநிதிகளுடன் சந்திப்பு.

மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் திரு கிரண் ரிஜிஜு ஜனவரி 28-ம் தேதி நிறுவனங்களின் இளம் தலைவர்கள் அமைப்பின் சர்வதேச தூதுக்குழு பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசினார். ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் நடத்திய இந்தச் சந்திப்பில் இஸ்ரேல், அமெரிக்கா, இங்கிலாந்து, கோஸ்டாரிகா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த சந்திப்பில்  புதுமைக் கண்டுபிடிப்புகள், இணைந்து செயல்படுவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இது குறித்து சமூக ஊடக  ‘எக்ஸ்’ தளத்தில், மத்திய அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள பதிவில்இந்த சர்வதேச தூதுக்குழுவின்  பிரதிநிதிகளின் இந்தியப் பயணம் குறித்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்ற கட்டிடம் இந்த  பிரதிநிதிகள் குழுவை மிகவும் ஈர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply