நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2024-25-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாட்டின் மின்சாரத் துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக் காட்டுகிறது என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் திரு மனோகர் லால் குறிப்பிட்டார்.
பொருளாதார ஆய்வறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மின்துறையின் சாதனைகள் குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் நிறுவப்பட்ட மின் திறன் ஆண்டுக்கு 7.2% அதிகரித்து, நவம்பர் 2024-ல் 456.7 ஜிகாவாட்டை எட்டியுள்ளது என்று அவர் கூறியுள்ளார். ரூ.1.85 லட்சம் கோடி முதலீட்டில், 18,374 கிராமங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 2.9 கோடி வீடுகள் பயனடைந்துள்ளதாக திரு திரு மனோகர் லால் தெரிவித்துள்ளார்.
திவாஹர்