தற்போதைய மாறும், தொழில்நுட்பம் சார்ந்த சூழலில் பொருத்தமானவர்களாக இருக்க, நெறிமுறை பாதுகாவலர்களாகவும், புதுமையில் நாட்டம் கொண்டவர்களாகவும் உத்திசார் ஆலோசகர்களாகவும் பட்டயக் கணக்காளர்கள் திகழ வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார். புதுதில்லியில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ஏற்பாடு செய்த உலக கணக்காளர்கள் மன்றத்தின் தொடக்க அமர்வில் உரையாற்றிய திரு ராஜ்நாத் சிங், இன்றைய காலகட்டத்தில் ‘விமர்சன சிந்தனை, உணர்ச்சி நுண்ணறிவு மற்றும் தகவமைப்புத் திறன் உள்ளிட்ட புதிய திறன்கள்’ ஒரு அத்தியாவசியத் தேவை என்று குறிப்பிட்டார். தொழில்நுட்ப முன்னேற்றங்களின் அசாதாரண வேகத்தை சுட்டிக் காட்டிய பாதுகாப்புத்துறை அமைச்சர், பெருநிறுவன நிலப்பரப்பு ஒரு காலத்தில் பெரிய, மையப்படுத்தப்பட்ட நிறுவனங்களால் ஆதிக்கம் செலுத்தப்பட்டது என்றும், இந்த நிலை ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கையில் ஏற்படும் தீவிர எழுச்சியால் உந்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். பன்னாட்டு வர்த்தகம் இப்போது ஒரு யதார்த்தமாகி விட்டது என்றும், நிறுவனங்கள் பெரிதாகவும் சிக்கலானதாகவும் வளர்ந்து வருவதால் தகவல் பரவல் ஏற்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
திவாஹர்