மத்திய பட்ஜெட் 2025-26-ல் முற்போக்கான, தொலைநோக்கு அறிவிப்புகளுக்காக நிதி அமைச்சருக்கு தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கொள்வதாக, மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார்., சுரங்கத்துறை முக்கிய பங்கு வகிக்கும் ஆறு துறைகளில் மாற்றத்தக்க சீர்திருத்தங்களைத் தொடங்குவதை இந்த பட்ஜெட் இலக்காகக் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் நமது உலகளாவிய போட்டித்தன்மையை வலுப்படுத்தும் என்றும், நிலையான வளர்ச்சியை நோக்கிய நாட்டின் ஊக்குவிப்பை குறிக்கிறது என்று கூறினார். சுரங்கத் துறையில் சீர்திருத்தங்கள், குறிப்பாக முக்கியமான கனிமங்களைப் பொறுத்தமட்டில், வளர்ச்சியடைந்த இந்தியா 2047-ன் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் நோக்கில் ஒரு முக்கிய படியாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.
நிலக்கரி, சுரங்கத் துறையில் தொடர் சீர்திருத்தங்கள் உள்நாட்டில் உற்பத்தி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் அதே நேரத்தில் உலக அளவில் கனிம சந்தையில் இந்தியாவை முக்கிய பங்கு வகிக்க உதவும் என்று அவர் கூறினார்.
எம்.பிரபாகரன்