இரு வருட ஏரோ-இந்தியா சர்வதேச கருத்தரங்கின் 15-வது பதிப்பு இன்று (2025 பிப்ரவரி 08) கர்நாடகாவின் பெங்களூருவில் தொடங்கியது. பாதுகாப்பு ஆராய்ச்சி – மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) இராணுவ விமான தகுதி சான்றிதழ் மையம் (செமிலாக்), ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா (ஏஎஸ்ஐ) உடன் இணைந்து ஏரோ இந்தியா 2025-க்கு முன்னோடியாக இரண்டு நாள் கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கருத்தரங்கு உலகளாவிய விண்வெளி அரங்கில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த ஆண்டு கருப்பொருள் ‘எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்கள்: வடிவமைப்பு சரிபார்ப்பில் சவால்கள்’ என்பதாகும். எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்களில் வளர்ந்து வரும் போக்குகள், ராணுவ விமானத் தகுதி சான்றிதழ், வடிவமைப்பு, சோதனை ஆகியவற்றில் உள்ள சவால்கள் குறித்த விவாதங்களும் அதற்கான தீர்வுகளும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது .
ஸ்பெயினில் இருந்து ஏர்பஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் போன்ற முக்கிய வெளிநாட்டு நிறுவனங்கள், இங்கிலாந்தில் இருந்து காலின்ஸ் ஏரோஸ்பேஸ், போன்ற சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். கருத்தரங்கில் பங்கேற்கும் இந்திய தொழில்துறை நிறுவனங்களில் அபேயன்ட்ரிக்ஸ் சொல்யூஷன்ஸ், அன்சிஸ் இன்க், குளோபல்ஸ் இன்க், ஜே. எஸ். ஆர் டைனமிக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை அடங்கும்.
எதிர்கால விண்வெளி தொழில்நுட்பங்களில் வடிவமைப்பு சரிபார்ப்பில் உள்ள சவால்கள் குறித்த பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய மொத்தம் 12 தொழில்நுட்ப அமர்வுகள் இந்த கருத்தரங்கில் இடம்பெறுகின்றன.
விண்வெளித் துறையின் செயலாளரும், இஸ்ரோ தலைவருமான டாக்டர் வி. நாராயணன், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையின் செயலாளரும், டிஆர்டிஓ தலைவருமான டாக்டர் சமீர் வி காமத் ஆகியோர் இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
டிஆர்டிஓ, பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள், ஆயுதப்படைகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் உள்ளிட்ட தனியார் தொழில்துறைகளைச் சேர்ந்த சுமார் 1,100 பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர். மேலும், இந்தியா, வெளிநாடுகளில் இருந்து 33 பேச்சாளர்கள் பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப உரைகளை வழங்குவார்கள்.
எம்.பிரபாகரன்