நிலக்கரியிலிருந்து எரிவாயுவை பிரித்தெடுக்கும் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூ.8,500 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் நிலக்கரி எரிவாயு ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துப் பூர்வமான அனுமதிக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
கூடுதல் செயலர் திருமதி விஸ்மிதா தேஜ், சிறப்புப்பணிக்கான அதிகாரி (தொழில்நுட்பம்), திரு ஆஷீஷ் குமார், நிலக்கரித்துறை இயக்குனர் (தொழில்நுட்பம்), ஸ்ரீ பி.கே.தாக்கூர் ஆகியோர் முன்னிலையில் நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், அனுமதிக் கடிதங்களை வழங்கினார்.
வகை II: தனியார் துறை/அரசு பொதுத்துறை நிறுவனங்கள் (ஒரு திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி அல்லது மூலதனச் செலவினத்தில் 15%, இதில் எது குறைவாக இருந்தாலும்)
வரும் 2030-ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன் நிலக்கரி எரிவாயு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளுக்கு நிலக்கரி எரிவாயு ஊக்குவிப்புத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. நிலக்கரி எரிவாயு உற்பத்தியில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை விரைவுபடுத்தவும், கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் கணிசமான அளவில் குறைக்கவும், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யவும், நிலக்கரிக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா