கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டிபாலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் உருவம் பதித்த கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இந்த சமூக விரோத செயலில் ஈடுப்பட்டவர்களை உடனடியாக கண்டறிந்து தண்டனை கிடைக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மறைந்த தலைவர்களுக்கு அவமரியாதை செய்யும் எச்செயலும் இனி நடைபெறக்கூடாது.
சேதப்படுத்தப்பட்ட கல்வெட்டை புதுப்பித்து அமைக்க வேண்டும்.
எனவே தமிழக அரசு மாநிலத்தில் மறைந்த தலைவர்களுக்கு மரியாதை ஏற்படுத்தும் வகையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா