குடியரசுத்தலைவர் மாளிகையின் முகப்பில் இன்று (பிப்ரவரி 16, 2025) காலை புதிய வடிவத்தில் நடைபெற்ற காவலர் மாற்ற விழாவின் தொடக்க நிகழ்ச்சியை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு பார்வையிட்டார்.
அடுத்த சனிக்கிழமை முதல் அதாவது பிப்ரவரி 22, 2025 முதல் இந்த விழாவை பார்வையாளர்கள் காண அனுமதிக்கப்படுவார்கள், அப்போது, குடியரசுத்தலைவர் மாளிகையின் பின்னணியில் ஒரு இயக்க ஆற்றல் மிகுந்த காட்சி மற்றும் இசை நிகழ்ச்சியை பொது மக்கள் காணலாம். குடியரசுத்தலைவரின் மெய்ப்பாதுகாவலர்களின் துருப்புக்கள் மற்றும் குதிரைகள் மற்றும் சம்பிரதாய காவலர் பட்டாலியனின் துருப்புக்கள், சம்பிரதாய ராணுவ பித்தளை இசைக்குழுவுடன் இணைந்து ஒரு பெரிய பகுதியில் பரவியுள்ள ராணுவ பயிற்சிகள், புதிய வடிவமைப்பின் ஒரு பகுதியாக இருக்கும்.
திவாஹர்