பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 22 வரை திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச கடற்படை மறுஆய்வு (IFR-ஐஎஃப்ஆர்) 2025-ல் பங்கேற்க இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் ஷர்துல், நீண்ட தூர கடல்சார் கண்காணிப்பு பி 8 ஐ விமானம் ஆகியவை இந்தோனேசியாவின் பாலி சென்றுள்ளன. மதிப்புமிக்க பன்னாட்டு கடற்படை நிகழ்வான ஐஎஃப்ஆர், இந்தோனேஷிய அதிபரால் ஆய்வு செய்யப்படும். இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கடற்படைகள் பங்கேற்கும்.
இந்த பயணத்தில், இந்திய கடற்படை, சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கூட்டம், விளையாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும்.
ஐ.எஃப்.ஆர் 25-த் தொடர்ந்து, ஐ.என்.எஸ் ஷர்துல், பி 8 ஐ இரண்டும் கொமோடோ பயிற்சியில் பங்கேற்கும். இது கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பலதரப்பு கடற்படை பயிற்சியாகும்.
எஸ்.சதிஸ் சர்மா