ஐந்து நாடுகளின் தூதர்கள் குடியரசுத் தலைவரிடம் நியமனப் பத்திரங்களை வழங்கினார்கள்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று  (பிப்ரவரி 17, 2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் கம்போடியா, மாலத்தீவுகள், சோமாலியா, கியூபா, நேபாளம் ஆகிய நாடுகளின் தூதர்களின் (அம்பாசிடர்கள்/ ஹை கமிஷனர்)நியமனப் பத்திரங்களை  குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார்.

நியமனப் பத்திரங்களை வழங்கியவர்கள்:

1. மேதகு திருமிகு ராத் மேனி, கம்போடியா தூதர்

2. மேதகு திருமிகு ஐஷாத் அசீமா, மாலத்தீவு குடியரசு தூதர்

3. மேதகு டாக்டர் அப்துல்லாஹி முகமது ஓடோவா, சோமாலியா கூட்டாட்சி குடியரசு தூதர்

4. மேதகு திரு ஜுவான் கார்லோஸ் மார்சன் அகுலேரா, கியூபா குடியரசு தூதர்

5. மேதகு டாக்டர் ஷங்கர் பிரசாத் சர்மா, நேபாள தூதர்.

Leave a Reply