இந்தியாவின் நான்காவது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

மத்திய அரசின் ஆழ்கடல் இயக்கச் செயல்பாடுகளின் கீழ், புவி அறிவியல் அமைச்சகம், சமுத்திரயன் திட்டத்தின் ஒரு பகுதியாக “மத்ஸ்யா-6000” என்று பெயரிடப்பட்ட 4-வது தலைமுறை ஆழ்கடல் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து மேம்படுத்தும் பணியை தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைத்திருந்தது. இந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் அதன் சிறிய 2.1 மீட்டர் விட்டம் கொண்ட கோள வடிவ பகுதிக்குள் மூன்று பேரை தங்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் கடல் ஆய்வுத் திறன்களில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். .

இதற்கான வடிவமைப்பு கட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மத்ஸ்யா-6000-ன் செயல்பாட்டிற்கு முக்கியமான பல்வேறு துணை அமைப்புகள் அடையாளம் காணப்பட்டு உருவாக்கப்பட்டன. துணை அமைப்புகள் அனைத்தும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவை தற்போது முழுமையான ஒருங்கிணைப்புக்கும் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளன.

அதன் வெளிப்புற கட்டமைப்பில் தடையற்ற ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக, 500 மீட்டர் செயல்பாட்டு வரம்பில் ஒருங்கிணைந்த உலர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தச் சோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து, மத்ஸ்யா 2025 ஜனவரி 27 முதல் 2025 பிப்ரவரி 12, வரை சென்னைக்கு அருகிலுள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமைந்துள்ள எல் அண்ட் டி கப்பல் கட்டும் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு நீரில் சோதனைகள்  நடத்தப்பட்டன. இது அந்த அமைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்தது.

Leave a Reply