தற்கால பாதுகாப்பு சவால்கள் குறித்த இரண்டு நூல்கள் வெளியீடு: கூட்டுப் போர் ஆய்வுகளுக்கான மையம் வெளியிட்டது.

பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையக ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை பணியாளர் பிரிவின்கீழ் உள்ள கூட்டுப் போர் ஆய்வுகளுக்கான மையமானது  இன்று (2025 பிப்ரவரி 18), இரண்டு முக்கியமான வெளியீடுகளை அறிமுகம் செய்தது. ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படை பணியாளர் பிரிவின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி. மேத்யூ இந்நூல்களை வெளியிட்டார்.   சினெர்ஜி என்ற  இதழின் பிப்ரவரி மாத பதிப்பையும், ‘ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ஐரோப்பாவிலும், இந்தியாவிலும் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பான  தனி நூலையும் அவர் வெளியிட்டார்.

ஆழமான பகுப்பாய்வுகளுடன், சிந்தனையைத் தூண்டும் இதழான சினெர்ஜி, தற்கால பாதுகாப்புச் சூழல் சார்ந்த உத்திகள் குறித்த விரிவான பார்வையை வழங்குகிறது. 

‘ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பான நூல் ரஷ்யா-உக்ரைன் மோதல் காரணமாக புவிசார் அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் பற்றிய ஆழமான பகுப்பாய்வை வழங்குகிறது.

Leave a Reply