13-வது மலேசியா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு கூட்டம் கோலாலம்பூரில் நடைபெற்றது.

மலேசியா-இந்தியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழுவின் 13-வது கூட்டம்  2025 பிப்ரவரி 19-ம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங், மலேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் திரு லோக்மான் ஹக்கீம் பின் அலி ஆகியோர் இந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர். அண்மையில் இரு  நாட்டு ஆயுதப் படைகளுக்கும் இடையே வளர்ந்து வரும் ஒத்துழைப்பு குறித்து இருதரப்பும் மகிழ்ச்சி தெரிவித்தன.

பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.   இணையதளப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன  தொழில்நுட்பங்களில் பரஸ்பரம் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில்  இருநாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிவகைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

சர்வதேச விவகாரங்கள் குறித்து  ஆலோசிப்பதற்கான பணிக்குழுவை உருவாக்குவது தொடர்பாக இறுதி செய்யப்பட்ட வரைவு விதிமுறைகளை  இருநாடுகளும் பரிமாறிக் கொண்டன.

இந்தியாவின் கிழக்கு கொள்கை, கடல்சார் ஒத்துழைப்பு (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) ஆகியவை இந்தோ-பசிபிக் பெருங்கடல்  பகுதியில் மலேசியாவை இந்தியாவின் ஒரு முக்கிய கூட்டாளி நாடாக முன் நிறுத்துகிறது.

Leave a Reply