இந்தியக் கடற்படைக் கப்பல் (ஐஎன்எஸ்) சுஜாதா, இந்தியக் கடலோரக் காவல்படைக் கப்பல் (ஐசிஜிஎஸ்) வீரா ஆகியவை மூலம் இந்திய கடற்படையின் முதலாவது பயிற்சி படைப்பிரிவு வெற்றிகரமாக பயணத்தை நிறைவு செய்து கம்போடியாவின் சிஹானுக்வில்லில் இருந்து 2025 பிப்ரவரி 17 அன்று புறப்பட்டது. மூன்று நாள் பயணத்தின் போது, இந்தியக் கடற்படை, ராயல் கம்போடிய கடற்படையுடன் இணைந்து நட்புறவை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டது.
ஐஎன்எஸ் சுஜாதா மற்றும் ஐசிஜிஎஸ் வீரா அதிகாரிகளுடன் இந்திய பயிற்சிப் பிரிவின் உயர் அதிகாரி ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். விரிவான கடல்சார் ஒத்துழைப்பையொட்டி பிராந்திய கடற்படைகளுடன் இந்திய கடற்படையின் ஈடுபாடு குறித்து சந்திப்பின் போது எடுத்துரைக்கப்பட்டது. இந்த துறைமுக சந்திப்பின் போது இந்தியப் பயிற்சி படைப் பிரிவு உயர் அதிகாரி கேப்டன் அன்சுல் கிஷோர் ராயல் கம்போடிய கடற்படை தளபதி அட்மிரல் டீ வின்ஹை பெனோம் பென்ஹில் உள்ள கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார். இருதரப்பு பரஸ்பரப் பயிற்சி, கூட்டு பயிற்சி, பிராந்திய பாதுகாப்பு, நல்லெண்ண நடவடிக்கைகள் குறித்து இவர்கள் கலந்துரையாடினர்.
எம்.பிரபாகரன்