மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் திரு எஸ். ராம் மோகன் நாயுடு இன்று விமானிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அறிமுகப்படுத்தினார். இது இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை நவீனமயமாக்குவதற்கும், மேம்படுத்துவதற்குமான ஒரு புதிய முயற்சியாகும். உலகளவில் இந்த மேம்பட்ட அமைப்பைச் செயல்படுத்தும் இரண்டாவது நாடாக இந்தியா திகழ்கிறது.
இந்த டிஜிட்டல் உரிமம் விமானிகளுக்கான பாரம்பரிய உரிமங்களுக்குப் பதிலாக வழங்கப்படுகிறது. இது மின்னணு சிவில் விமானப் போக்குவரத்து செயலி மூலம் பாதுகாப்பாக அணுகக்கூடியதாக இருக்கும். இது மத்திய அரசின் “எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளுதல்” மற்றும் “டிஜிட்டல் இந்தியா” முன்முயற்சிகளுடன் இணக்கமான மற்றும் வெளிப்படையான செயல்முறையை உறுதி செய்யும்.
எம்.பிரபாகரன்