மேற்கு வங்கத்தின் வெகுட்டியா கிராமத்தில் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது இரண்டு பேர் உயிரிழந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை.

மேற்கு வங்க மாநிலம், புர்பா மேதினிபூர் மாவட்டம் நந்திகிராம் ஒன்றியத்தில் உள்ள வெகுட்டியா கிராமத்தின் கழிவுநீர் தொட்டியைச் சுத்தம் செய்யும் போது நச்சு வாயுவை சுவாசித்ததில் இருவர் உயிரிழந்தனர்.  மேலும் இருவர் காயமடைந்தனர். இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம், தானாக முன்வந்து  விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது பாதிக்கப்பட்டவர்களின் மனித உரிமை மீறப்பட்டுள்ள கடுமையான பிரச்சினையாக இருக்கும் என்று ஆணையம் கருதுகிறது. இதுகுறித்து, இரண்டு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு மேதினிபூர் மாவட்ட மாஜிஸ்திரேட், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply