தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ.92.45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள், 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (20.2.2025) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் 92 கோடியே 45 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 6 வட்ட செயல்முறை கிடங்கு வளாகங்கள், 11 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் ஆகியவற்றை திறந்து வைத்து, 10 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 6000 மெ.டன் கொள்ளளவு கொண்ட 6 கூடுதல் வட்ட செயல்முறை கிடங்குகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
கே.பி.சுகுமார்