கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1476.22 கோடி செலவில் 602 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 44,689 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று (21.2.2025) கடலூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, பொதுமக்கள் வழிநெடுகிலும் எழுச்சியுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் சாலையில் நீண்ட தூரம் நடந்து சென்று பெண்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அளித்த உற்சாக வரவேற்பினை ஏற்றுக் கொண்டு, அவர்களுடன் உரையாடி, பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், முதலமைச்சர் அவர்களுடன் பொதுமக்கள் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் , கடலூர் மாவட்டத்தில் 704 கோடியே 89 இலட்சம் ரூபாய் செலவில் 602 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 384 கோடியே 41 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 178 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 386 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 44,689 பயனாளிகளுக்கு வழங்கினார்.
எஸ்.திவ்யா