குறைந்த விலை, தொழில் வாய்ப்பு – ‘முதல்வர் மருந்தகம்’ நோக்கத்தை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

இப்போது திறக்கப்பட்டிருக்கும் ஆயிரம் மருந்தகங்கள் என்பது, முதல் கட்டம்தான். அடுத்தடுத்த கட்டங்களில், இந்த எண்ணிக்கையை அதிகரிக்கப் போகிறோம். ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, இந்தத் திட்டத்துக்கு மற்றொரு நோக்கமும் இருக்கிறது. B.Pharm, D.Pharm படித்த இளைஞர்களை சொந்தமாக தொழில் தொடங்குவதற்கான அடித்தளம் அமைப்பதுதான் அந்த நோக்கம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.24) சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கில், கூட்டுறவுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “முதல்வர் மருந்தகம்” என்ற புதிய திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 1000 மருந்தகங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். 

Leave a Reply