விண்வெளி பொருளாதாரம் சில ஆண்டுகளில் 8 பில்லியன் டாலரில் இருந்து 44 பில்லியன் டாலராக ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

“இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் அடுத்த சில ஆண்டுகளில் 8 பில்லியன் டாலரில் இருந்து 44 பில்லியன் டாலராக ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும்,  இது இந்திய பொருளாதாரத்தில் மதிப்பு கூட்டலை ஏற்படுத்தி, 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நிலையை நோக்கி நடைபோடும்” என்று மத்திய விண்வெளித்துறை இணையமைச்சரும் புவி அறிவியல் துறை இணையமைச்சருமான (தனி பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் இன்று முதன்மை ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த “வர்த்தக மாநாட்டில்” உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்திய விண்வெளித் துறை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துரைத்த அமைச்சர், அதிகரித்த விண்வெளி பட்ஜெட் ஒதுக்கீடு இந்த வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது என்று சுட்டிக் காட்டினார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், விண்வெளி பட்ஜெட் 2013-14-ம் ஆண்டில் ரூ .5,615 கோடியிலிருந்து 2025-2026-ம் ஆண்டில் ரூ .13,416 கோடியாக கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது, இது விண்வெளித் துறையில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

டாக்டர் ஜிதேந்திர சிங், 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக இருந்ததைச் சுட்டிக்காட்டினார். தனியார் துறை பங்களிப்பை விண்வெளித் துறையில் அனுமதித்து, நேரடி அன்னிய முதலீட்டை கொண்டு வந்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதல் தலைமுறை விண்வெளி புத்தொழில் நிறுவனங்கள் வெற்றிகரமான நிறுவனங்களாக மாறியுள்ளன என்றும் அவர் கூறினார்.

நிலவின் தென் துருவத்தை வெற்றிகரமாக அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பெற்றிருப்பது போன்ற வரலாற்று மைல்கற்கள் குறித்தும் டாக்டர் ஜிதேந்திர சிங் பேசினார்.

Leave a Reply