சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் அளவில் உருவாக்கப்பட்டுள்ள நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவதன் வாயிலாக எல்லைப்புற தொழில்நுட்பத்தில் முன்னோடி நாடாகத் திகழ முடியும்: பாதுகாப்பு அமைச்சர்.

போர் முறைகள் இப்போது ஆயுதத் தளவாடப் பயன்பாட்டிலிருந்து மென் பொருள் சார்ந்ததாக மாறி வருகின்றன. புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எட்டக் கூடிய வகையில் உள்ளன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், இயந்திரக் கற்றல், தூய்மையான தொழில்நுட்பம் போன்ற தொழில்நுட்பங்களில் இந்தியாவை முன்னோடி நாடாக உருவாக்க வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார். முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப சவால்களுக்குத் தீர்வு காணும் வகையில், இந்தியா எத்தகைய சூழலையும் எதிர்கொள்ளும் வகையில் வலிமையானதாகவும் பாதுகாப்பாகவும் இருக்க முடியும் என்று கூறினார். இளைஞர்கள் அறிவியல் மீதான ஆர்வத்தை  வளர்த்துக் கொள்வதுடன் விமர்சனங்களை எதிர்கொள்வது குறித்த சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய அவர், அறிவியல் என்பது மனிதகுலத்திற்கு கிடைத்த  அழகான பரிசு என்றும் அதை சிதைக்காமல், சமுதாய முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் சர்வதேச அளவில் போட்டியிடும் வகையில் அமைந்துள்ளது. இதனை சிறந்த முறையில் பயன்படுத்தி, அறிவியல் மீதான ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும், எல்லைப்புற தொழில்நுட்பங்களில் முன்னோடி நாடாக சிறந்து விளங்கவும் இளைஞர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்தார். இன்று (2025 பிப்ரவரி 28-ம் தேதி) தேசிய அறிவியல் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த இரண்டு நாள் அறிவியல், தொழில்நுட்ப மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார்.

Leave a Reply