பிப்ரவரி 2025 வரை உற்பத்தி மற்றும் அனுப்புதல் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் இந்தியாவின் நிலக்கரித் துறை அதன் வலுவான செயல்திறனைத் தொடர்கிறது. ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி 928.95 மில்லியன் டன்களை ) எட்டியுள்ளது, இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 878.55 மில்லியன் டன்னுடன் ஒப்பிடும்போது 5.73% அதிகரிப்பாகும். அதேபோல், ஒட்டுமொத்த நிலக்கரி அனுப்புதல் 929.41 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டில் 880.92 மெட்ரிக் டன்னிலிருந்து 5.50% வளர்ச்சியைக் குறிக்கிறது.
இந்த வலுவான செயல்திறன், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது. நாடு அதிகரித்து வரும் தேவையை திறமையாக பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் செயல்பாட்டுத் திறன்களை அரசு தொடர்ந்து இயக்கி வருகிறது. வரும் மாதங்களில் இந்த நேர்மறையான வேகத்தைத் இது தக்கவைக்கிறது.
திவாஹர்