சிட்னி பல்கலைக்கழகத்தின் மூத்த துணை விரிவுரையாளர் டாக்டர் ஆன் லீபர்ட், புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள மக்கள் மருந்தக மையத்திற்கு விஜயம் செய்து, சுகாதார தீர்வுகள் துறையில் அறிவு பகிர்வு, ஒத்துழைப்புக்கான சாத்தியமான வழிகளை ஆய்வு செய்தார்.
பல நாடுகளில் செயல்படுத்த வேண்டிய ஒரு அற்புதமான முயற்சி இது என்று டாக்டர் ஆன் கூறினார். ஆஸ்திரேலியாவில் பல தொலைதூர பகுதிகள் உள்ளன என்றும் அப்பகுதி மக்கள் மருந்தகங்களை எளிதில் அணுக முடியாது என்றும், மலிவு விலையில் மருந்துகளை வழங்க இதுபோன்ற மாதிரியை அங்கு பின்பற்றலாம் என்றும் அவர் கூறினார்.
மலிவான விலையில் உயர்தர மருந்துகள் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதில் இந்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை டாக்டர் ஆன் லீபர்ட் பாராட்டினார். அத்தியாவசிய மருந்துகள் அனைவருக்கும் கிடைப்பது பொது சுகாதாரத்திற்கு முக்கியமானது என்று கூறிய அவர், இதில் இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.
எஸ்.சதிஸ் சர்மா