குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பிரத்யேகமான வனஉயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முன்முயற்சியான வந்தாராவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். கருணைமிக்க முயற்சிகளுக்காக திரு அனந்த் அம்பானி மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டிய பிரதமர், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வனஉயிரின நலனை ஊக்குவிக்கும் அதே வேளையில், விலங்குகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக வந்தாரா திகழ்கிறது என்று கூறியுள்ளார்.
இது குறித்து சமூக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:
சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வனஉயிரின நலனை ஊக்குவிக்கும் அதே வேளையில், விலங்குகளுக்குப் பாதுகாப்பான புகலிடத்தை வழங்கும் தனித்துவமான வனஉயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முயற்சியான வந்தாராவை தொடங்கி வைத்தேன். இந்த கருணைமிக்க முயற்சிக்காக அனந்த் அம்பானி மற்றும் அவரது ஒட்டுமொத்த குழுவையும் நான் பாராட்டுகிறேன்.
வந்தாரா போன்ற ஒரு முயற்சி உண்மையிலேயே பாராட்டத்தக்கது, நமது புவியை நாம் பகிர்ந்து கொள்பவர்களைப் பாதுகாப்பதற்கான நமது பல நூற்றாண்டுகள் பழமையான நெறிமுறைகளுக்கு ஒரு துடிப்பான எடுத்துக்காட்டு. இதோ சில காட்சிகள்… ஜாம்நகரில் உள்ள வந்தாராவுக்கு நான் சென்றதில் மேலும் சில காட்சிகள்.
எம்.பிரபாகரன்