தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் துணிச்சலான நடவடிக்கைகள்.

நாட்டின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக திரு ஞானேஷ் குமார் பொறுப்பேற்ற பிறகு இந்த ஒரு மாத காலத்தில் அவர் தலைமையில் தேர்தல் ஆணையர்களான டாக்டர் சுக்பீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் இணைந்து வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்கும் இனிமையான அனுபவத்தை உறுதி செய்யும் வகையில் ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறைகள் வலுவானதாகவும் வாக்காளர்கள் பங்கேற்பை அதிகரிப்பதாகவும் இருப்பதை உறுதி செய்து வருகின்றனர்.

நாட்டின் ஜனநாயக வலிமையை  பறைசாற்றும்  வகையில் சுமார் 100 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் துறைசார்ந்த நிபுணர்கள் இடையேயான தொழில்நுட்ப ஆலோசனைகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. வாக்காளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடியில் மட்டுமே வாக்களிக்க முடியும். நாடு முழுவதிலும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளை அகற்றவும், பல தசாப்தங்களாக நீடித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு 3 மாதகாலத்திற்குள் தீர்வு காணவும்  இந்தக் குழு முடிவு செய்துள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான பதிவு அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் வாக்காளர் பட்டியலை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட உள்ளது. 2025 ஜனவரி 6 முதல் 10 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் (எஸ்.எஸ்.ஆர்) முகாம் நிறைவடைந்த பிறகு 89 மேல்முறையீடுகள், ஒரே ஒரு இரண்டாவது மேல்முறையீடு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டதாக  தேர்தல் ஆணையம் கடந்த  மார்ச் 7-ம் தேதி தெளிவுபடுத்தியுள்ளது.

தகுதியுள்ள அனைத்து மக்களும் வாக்காளர் பட்டியலில் 100% சேர்க்கையை உறுதி செய்வது, வாக்களிப்பதை எளிதாக்குவது, போன்றவை இந்திய தேர்தல் ஆணையத்தின் முக்கிய குறிக்கோளாகும். எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் 1,200 வாக்காளர்களுக்கு மேல் வாக்காளர்கள் இருக்கக் கூடாது என்றும், வாக்குச் சாவடிகள் வாக்காளர்கள் வசிக்கும் பகுதிகளில் 2 கி.மீ தொலைவிற்குள் இருப்பதை உறுதி செய்வதற்வகான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தொலைதூர கிராமப்புறங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில்  அடிப்படை வசதிகள்  உறுதி செய்யப்படும். நகர்ப்புறத்தில் வசிக்கும் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

Leave a Reply