மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர், தேசிய ஊட்டச்சத்து மாதம் 2024-ஐ மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் செப்டம்பர் 1, 2024 அன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திருமதி தாக்கூர், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் 2018-ல் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், நாடு முழுவதும், குறிப்பாக பழங்குடியினர் பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்காற்றியுள்ளது என்றார்.
இந்த தேசிய ஊட்டச்சத்து மாதம் 2024-ல் அனைத்து மக்களும் தீவிரமாக பங்கேற்கவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதிலும், ஆரோக்கியமான, வளமான மற்றும் சக்திவாய்ந்த இந்தியாவை உருவாக்க பங்களிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
எம்.பிரபாகரன்