இந்திய கடலோர காவல்படையின் (ஐசிஜி) ரோந்துக் கப்பல் சுஜய் ஒருங்கிணைந்த ஹெலிகாப்டருடன் கூடிய ரோந்துக் கப்பலாகும். இது, கிழக்கு ஆசியாவில் நடைபெற்று வரும் வெளிநாட்டு பயணத்தின் ஒரு பகுதியாக 2024 செப்டம்பர் 04 அன்று தென் கொரியாவின் இன்சியானுக்குத் துறைமுக பயணத்தை மேற்கொண்டது. நான்கு நாள் இந்தக் கப்பல் அங்கு முகாமிட்டு இருக்கும். இந்தப் பயணத்தின்போது, ஐசிஜி-யின் சுஜய் கப்பல் குழுவினர், கொரிய கடலோர காவல்படையுடன் (கேசிஜி) தொழில்முறை பயிற்சிகளில் ஈடுபடுவார்கள்.
கடல் மாசுபாட்டைத் தடுத்தல், கடல்சார் தேடுதல், மீட்பு நடவடக்கைகள், கடல்சார் சட்ட அமலாக்க நடைமுறைகள் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படும். இருதரப்புப் பயிற்சிகள், கூட்டு யோகா அமர்வுகள், நட்புணர்வு விளையாட்டு நிகழ்வுகள் ஆகியவையும் இதில் அடங்கும்.
2006 மார்ச் 13 அன்று, இந்திய கடலோரக் காவல் படை, கொரிய கடலோர காவல் படையுடன் (கேசிஜி) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் மேம்பட்ட கடல்சார் ஒத்துழைப்பு ஈடுபாடுகளை நிறுவனமயமாக்கியது. தற்போது இந்த கொரிய விஜயத்திற்கு முன்னர், ஐசிஜி கப்பல் சுஜய், இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு துறைமுகப் பயணம் மேற்கொண்டு, கடல்சார் பயிற்சிகளில் ஈடுபட்டது.
எஸ்.சதிஸ் சர்மா