இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கூட்டுக் குழுவின் 6 வது கூட்டம் ரியாதில் நடைபெற்றது.
இந்தியாவும் சவுதி அரேபியாவும் நேற்று (2024 செப்டம்பர் 04) அன்று சவுதி அரேபியாவின் ரியாத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஆறாவது கூட்டுக் குழு கூட்டத்தை நடத்தின. நீண்டகால, பன்முக பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிகள் குறித்து இரு நாடுகளும் இதில் விவாதித்தன. ராணுவம், கூட்டுப் பயிற்சி, பாதுகாப்புத் தொழில், ஆராய்ச்சி- மேம்பாடு போன்றவற்றில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது குறித்து விரிவான விவாதங்கள் நடைபெற்றன.
இந்தியாவும் சவுதி அரேபியாவும் பல நூற்றாண்டுகள் பழமையான பொருளாதார, சமூக-கலாச்சார உறவுகளின் அடிப்படையில் சுமூகமான நட்புறவைக் கொண்டுள்ளன. பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை வழங்குகிறது. கூட்டு பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு என்பது பாதுகாப்பு ஒத்துழைப்பின் நோக்கங்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஒரு வழிமுறையாகும்.
இணைச் செயலாளர் திரு அமிதாப் பிரசாத் தலைமையிலான இந்தியக் குழுவில் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். சவுதி அரேபிய தூதுக்குழுவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் சல்மான் பின் அவத் அல்-ஹர்பி இந்த கூட்டத்திற்கு கூட்டாகத் தலைமை வகித்தார்.
திவாஹர்