இந்தியா மற்றும் மாலத்தீவு இடையேயான 5 வது பாதுகாப்பு ஒத்துழைப்பு பேச்சுவார்த்தை செப்டம்பர் 06, 2024 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இந்திய தூதுக்குழுவுக்கு பாதுகாப்புத் துறை செயலாளர் திரு கிரிதர் அரமானே தலைமை தாங்கினார், மாலத்தீவு தூதுக்குழுவுக்கு மாலத்தீவு தேசிய பாதுகாப்பு படை தளபதி ஜெனரல் இப்ராஹிம் ஹில்மி தலைமை தாங்கினார் .
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான விஷயங்களை விவாதிக்க இரு தரப்பினருக்கும் இந்த சந்திப்பு வாய்ப்பளித்தது . இதில், தற்போது நடைபெற்று வரும் பல்வேறு பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டங்களை அமல்படுத்துவதை விரைவுபடுத்துவதும் அடங்கும்.
உயர்மட்ட பரிமாற்றங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பொதுவான அக்கறையுள்ள வேறு சில பகுதிகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர். எதிர்வரும் இருதரப்பு ராணுவப் பயிற்சியில் பங்கேற்பது தொடர்பான அம்சங்களும் கலந்துரையாடப்பட்டன. எதிர்காலத்தில் இரு நாடுகளின் பகிரப்பட்ட நலன்களை முன்னெடுத்துச் செல்வதுடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நிலைத்தன்மையையும் செழிப்பையும் கொண்டு வரும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஆக்கப்பூர்வமாக அமைந்தன.
எஸ்.சதிஸ் சர்மா