விவசாயிகளின் நலனுக்காக அனைத்து முயற்சிகளும், முடிவுகளும் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு,  விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதிலும், ஊரக வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதிலும் அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

வேளாண் வருமானம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட சமீபத்திய முடிவுகளை எடுத்துரைத்த திரு மோடி, வெங்காயம் மீதான ஏற்றுமதி வரியைக் குறைப்பதாக இருந்தாலும் சரி அல்லது சமையல் எண்ணெய்கள் மீதான இறக்குமதி வரியை அதிகரிப்பதாக இருந்தாலும் சரி, இதுபோன்ற முடிவுகள் நமது உணவு உற்பத்தியாளர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று கூறினார். இந்த முடிவுகள் அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் அதே வேளையில், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்று  கூறியுள்ளார்.

பிரதமர் ஒரு எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது;

“நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்காக இரவும் பகலும் உழைக்கும் நமது  விவசாய சகோதர சகோதரிகளின் நலனுக்காக நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை குறைப்பதாக இருந்தாலும் சரி, சமையல் எண்ணெய்களின் இறக்குமதி வரியை அதிகரிப்பதாக இருந்தாலும் சரி, இதுபோன்ற பல முடிவுகள் நமது விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும். இது அவர்களின் வருமானத்தை அதிகரிக்கும் அதே வேளையில், கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்”.

Leave a Reply