விமானப்படை சங்கத்தின் ஆண்டு விழா..!

விமானப்படை சங்கத்தின் 44-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்பட்டது . கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, விமானப்படை சங்கத்தின் தலைவர், ஏர் சீஃப் மார்ஷல் ஆர்.கே.எஸ் பதௌரியா (ஓய்வு)  15 செப்டம்பர் 24 அன்று காலையில் அனைத்து இந்திய விமானப்படை வீரர்கள் சார்பாக தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம்   வைத்து நாட்டிற்காக  மிக உயர்ந்த தியாகம் செய்த  ஆயுதப்படை வீரர்களை கௌரவித்தார். இதைத் தொடர்ந்து வருடாந்திர பொதுக்கூட்டம் (ஏஜிஎம்) நடைபெற்றது.

இந்த விழாவில் விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பல ஓய்வு பெற்ற விமானப்படை தளபதிகள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விமானப்படை சங்கம் என்பது அரசு சாரா துறையில் உள்ள ஒரு நல அமைப்பாகும், இது விமான வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விதவைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளின் துயர் துடைப்பதிலும் சங்கம் உறுதியாக உள்ளது. இந்த சங்கம் 1980 செப்டம்பர் 15 அன்று விமானப்படை மார்ஷல் அர்ஜன் சிங்  ஆதரவில் நிறுவப்பட்டது. இது நாடு முழுவதும் இருபது கிளைகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் இரண்டு கிளைகளைக் கொண்டுள்ளது. இதில் கிட்டத்தட்ட 98494 விமான வீரர்கள் மற்றும் 7470 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர்.

Leave a Reply