கடற்படைத் தளபதிகள் மாநாடு 2024, செப்டம்பர் 17 முதல் 20 வரை புதுதில்லியில் நடைபெறவுள்ளது.

2024-ம் ஆண்டின் கடற்படைத் தளபதிகள் மாநாட்டின் இரண்டாவது தொகுப்பை, செப்டம்பர் 17 முதல் 20 வரை புதுதில்லியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாடு, கடற்படை தளபதிகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க உத்திசார்ந்த செயல்பாட்டு மற்றும் நிர்வாக பிரச்சினைகள் குறித்த விவாதங்களை எளிதாக்கும் உயர்மட்ட ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும்  நிகழ்வாகும். வளர்ந்து வரும் புவிசார் அரசியல், பிராந்திய சவால்கள் மற்றும் மேற்கு ஆசியாவில் கடல்சார் பாதுகாப்பு சூழ்நிலையில் உள்ள சிக்கலான தன்மை ஆகியவற்றின் பின்னணியில் நடைபெறும்  இந்த மாநாடு, இந்திய கடற்படையின் எதிர்கால போக்கை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த மாநாட்டின் போது, தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய எதிர்பார்ப்புகள் தொடர்பான விஷயங்கள் குறித்து கடற்படை தளபதிகளிடம் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றுவார். முப்படைகளின் தலைமைத் தளபதி, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படைத் தளபதிகளுடன் இணைந்து முப்படைகளுக்கிடையேயான ஒத்துழைப்புக் குறித்து  கடற்படைத் தளபதிகளுடன் விவாதிப்பார்.

கடற்படைத்தளபதியின் தொடக்க உரையுடன் இந்த மாநாடு தொடங்கும். கடந்த ஆறு மாதங்களாக இந்திய கடற்படையால் பின்பற்றப்பட்ட முக்கிய செயல்பாடு, பொருட்கள், தளவாடங்கள், மனிதவள மேம்பாடு, பயிற்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் குறித்து அவர் ஆய்வு செய்வார் மற்றும் கடல்சார் நலன்களைப் பாதுகாக்க ஆற்ற வேண்டிய முக்கிய மைல்கற்கள் குறித்து விவாதிப்பார்.

Leave a Reply