இ-சினிபிரமானில் அணுகல் தன்மைகள்” தொகுதி வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டது.

இ-சினிபிரமானில் உள்ள “அணுகல் தன்மைகள்” தொகுதி திட்டமிடப்பட்ட காலக்கெடுவின்படி வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது 2024 செப்டம்பர் 15, வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, செவித்திறன் மற்றும் பார்வையற்றோருக்கு தேவையான அணுகல் அம்சங்களுடன் விண்ணப்பதாரர்கள் இப்போது விண்ணப்பிக்கலாம் / சமர்ப்பிக்கலாம். இந்த வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்கான நடைமுறை தேதியாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 2024  செப்டம்பர் 15-ஐ நிர்ணயித்திருந்தது.

புதிய வழிகாட்டுதல்கள் & மேம்படுத்தப்பட்ட அணுகல்தன்மை தரநிலைகள்

மாற்றுத்திறனாளிகள் சினிமா பார்ப்பதை மேலும் உள்ளடக்கியதாகவும், அணுகக்கூடியதாகவும் மாற்றுவதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையை எடுத்துள்ளது. 2024, மார்ச் 15, தேதியிட்ட அலுவலக குறிப்பாணை மூலம், செவித்திறன் மற்றும் பார்வைக் குறைபாடுள்ள நபர்களுக்காக, திரையரங்குகளில் திரைப்படங்களின் பொதுக் காட்சிக்கானஅணுகல் தரங்களைமேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டது.

வணிக நோக்கங்களுக்காக / திரையரங்குகளில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தால்  சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு, இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும். ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளில் சான்றிதழ் பெற்ற அனைத்து திரைப்படங்களும் *செவித்திறன் குறைபாடுள்ள மற்றும் பார்வைக் குறைபாடுள்ளவர்களுக்கு தலா குறைந்தபட்சம் ஒரு அணுகல் அம்சத்தை வழங்க வேண்டும்.

Leave a Reply