கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளிக் கட்டடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம் மற்றும் நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்துடன் கூடிய கொளத்தூர் மக்கள் சேவை மையம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 4 கோடியே 75 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளிக் கட்டடம், புனரமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடம், நீத்தார் நினைவு மண்டபம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், முத்துகுமரப்பா தெருவில் 13 கோடியே 47 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார்பதிவாளர் அலுவலகத்துடன் கூடிய கொளத்தூர் மக்கள் சேவை மையம் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கே.பி.சுகுமார்