கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கிரீஸ் நாட்டுக்கு 4 நாள் அரசு முறை பயணமாக 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை சென்றுள்ளார். கடற்படை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, இந்தியா மற்றும் கிரீஸ் இடையேயான இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் அமைந்துள்ளது.
இந்தப் பயணத்தின் போது, பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் திரு அயோனிஸ் கெபலோஜியானிஸ், ஹெலெனிக் கடற்படை பொது ஊழியர்களின் (எச்ஜிஎன்எஸ்) தலைவர் வைஸ் அட்மிரல் டிமிட்ரியோஸ் இ கடாராஸ், ஹெலெனிக் தேசிய பாதுகாப்பு ஜெனரல் ஸ்டாஃப் (எச்ஜிஎன்எஸ்) துணைத் தலைவர் வைஸ் அட்மிரல் கிறிஸ்டோஸ் சசியாகோஸ் உள்ளிட்ட மூத்த கிரேக்க பாதுகாப்பு அதிகாரிகளுடன் இருதரப்பு விவாதங்களில் அவர் ஈடுபடுவார்.
இந்த விவாதங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பு பகுதிகளின் பரந்த அளவில் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக கடல்சார் பாதுகாப்பு, கூட்டுப் பயிற்சி முயற்சிகள் மற்றும் இரு கடற்படைகளுக்கும் இடையே எதிர்கால செயல்பாட்டு ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவை இதில் அடங்கும்.
தமது பயணத்தின் ஒரு பகுதியாக, அட்மிரல் தினேஷ் கே திரிபாதி சலாமிஸ் விரிகுடா, ஹெலெனிக் கடற்படை தளம் மற்றும் ஹெலெனிக் கடற்படை அகாடமி ஆகியவற்றை பார்வையிடுவார். ஹெலெனிக் கடற்படை, கிரேக்கத்தின் கடற்படை திறன்கள் மற்றும் பயிற்சி முறைகளை கடற்பை தளபதிக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
ஹெலனிக் கடற்படைத் தலைவர் புகழ்பெற்ற ஜார்ஜியோஸ் அவெரோஃப், ஹெலெனிக் கடற்படை அருங்காட்சியக கப்பலில் இந்திய கடற்படை தளபதியை வரவேற்பார். கிரேக்கத்தின் வளமான கடல்சார் வரலாறு மற்றும் கடற்படை பாரம்பரியம் குறித்த ஒரு பார்வையை அவருக்கு வழங்குவார்.
கூட்டுப் பயிற்சிகள், துறைமுக வருகைகள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் உட்பட இந்தியா மற்றும் கிரீஸ் இடையேயான வலுவான கடற்படை உறவுகளை இந்த பயணம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கிரீஸில் அட்மிரல் தினேஷ் கே திரிபாதியின் ஈடுபாடுகள் இரு கடற்படைகளுக்கும் இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்புகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்பை உறுதி செய்கிறது.
எஸ்.சதிஸ் சர்மா