மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், மும்பை துறைமுகத்திலிருந்து ‘குரூஸ் பாரத் மிஷனை’ தொடங்கி வைத்தார். நாட்டில் கப்பல் சுற்றுலாவின் மிகப்பெரிய திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டம், ஐந்து ஆண்டுகளுக்குள் கப்பல் பயணிகள் போக்குவரத்தை இரட்டிப்பாக்குவதன் மூலம், நாட்டின் கப்பல் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; அதாவது 2029-க்குள்” என்று திரு. சர்பானந்த சோனாவால் கூறினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் சோனாவாலுடன் மத்திய இணையமைச்சர் திரு. சாந்தனு தாக்கூரும் கலந்து கொண்டார்.
சர்பானந்த சோனாவால் புதுதில்லியில் இன்று ‘எம்ப்ரஸ்’ சொகுசு கப்பலில் இருந்து இந்த பயணத்தை தொடங்கி வைத்தார். கப்பல் சுற்றுலாவுக்கான உலகளாவிய மையமாக மாறுவதற்கான இந்தியாவின் பார்வையை மேம்படுத்துவதையும், நாட்டை முன்னணி உலகளாவிய கப்பல் இடமாக மேம்படுத்துவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. குரூஸ் இந்தியா மிஷன் அக்டோபர் 1, 2024 முதல் 31 மார்ச் 2029 வரை மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும். முதல் கட்டம் (01.10.2024 – 30.09.2025) ஆய்வுகளை நடத்துதல், முதன்மை திட்டமிடல் மற்றும் அண்டை நாடுகளுடன் கப்பல் கூட்டணிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும். இது தற்போதுள்ள கப்பல் முனையங்கள், மெரினாக்கள் மற்றும் பயண சுற்றுகளின் திறனை நவீனப்படுத்தும். கட்டம் 2 (01.10.2025 – 31.03.2027) புதிய கப்பல் முனையங்கள், மெரினாக்கள் மற்றும் அதிக சாத்தியமான பயண இடங்கள் மற்றும் சுற்றுகளை செயல்படுத்த இடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தும். கட்டம் 3 (01.04.2027 – 31.03.2029) இந்திய துணைக் கண்டம் முழுவதும் உள்ள அனைத்து கப்பல் சுற்றுகளையும் ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தும், இது கப்பல் சுற்றுச்சூழல் அமைப்பின் முதிர்ச்சியைக் குறிக்கும், அதே நேரத்தில் கப்பல் முனையங்கள், மெரினாக்கள் மற்றும் இடங்களின் வளர்ச்சியைத் தொடரும்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், “இந்தியாவின் கப்பல் போக்குவரத்துத் துறையின் மறுசீரமைப்பில் ‘குரூஸ் பாரத் மிஷன்’ ஒரு திருப்புமுனை தருணமாகும் என்றார் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்தியாவின் நீலப் பொருளாதாரத்தின் மகத்தான ஆற்றலைப் பயன்படுத்த அரசு உறுதிபூண்டுள்ளது. குரூஸ், நம் நாட்டில் அதன் மிகப்பெரிய ஆற்றலுடன், நீண்ட காலமாக ஆராயப்படாமல் உள்ளது. இந்த தொலைநோக்கு இயக்கத்தின் மூலம், நமது கடல்சார் நிலப்பரப்பை மாற்றுவதையும், கப்பல் சுற்றுலா மூலம், இந்தியாவின் பரந்த கடற்கரை மற்றும் நீர்வழிகளின் திறனைப் பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு மேம்பாடு, சுற்றுலாப் பயணிகளுக்கான கப்பல் அனுபவம் மற்றும் வளங்களின் நிலைத்தன்மை ஆகியவற்றின் முக்கியமான தூண்களின் அடிப்படையில், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதுடன், கப்பல் சுற்றுலா மற்றும் கடல்சார் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கு உதவும்.
குரூஸ் இந்தியா மிஷன் மூன்று முக்கிய கப்பல் பிரிவுகளை குறிவைக்கிறது. முதலாவதாக, ஓஷன் & ஹார்பர் குரூஸ் பிரிவில் ஆழ்கடல் மற்றும் கடலோர பயணங்கள், துறைமுகம் சார்ந்த படகு மற்றும் படகோட்டம் பயணங்கள் உள்ளிட்ட கடல் பயணங்கள் அடங்கும். இரண்டாவதாக, ரிவர் & இன்லேண்ட் குரூஸ் பிரிவில் கால்வாய்கள், உப்பங்கழிகள், சிற்றோடைகள் மற்றும் ஏரிகளில், நதி மற்றும் உள்நாட்டுப் பயணங்களில் கவனம் செலுத்துகிறது. கடைசியாக, தீவு குரூஸ் பிரிவு, தீவுகளுக்கு இடையேயான பயணங்கள், கலங்கரை விளக்க சுற்றுப்பயணங்கள், நேரடி கப்பல் அனுபவங்கள், பயண பயணங்கள் மற்றும் குறைவாக அறியப்பட்ட இடங்களை எடுத்துக்காட்டுகிறது.
எஸ்.சதிஸ் சர்மா