ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் தலைமையகம் 24வது உதய தினத்தை 2024, அக்டோபர் 01 அன்று கொண்டாடியது. இதையொட்டி ஒருங்கிணைந்த பாதுகாப்புப் படைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஜே.பி.மேத்யூ புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
எதிர்பார்க்கும் அச்சுறுத்தல் உணர்வு அடிப்படையில், முப்படைகளின் உபகரணங்களை நவீனமயமாக்கல், மேம்பாட்டிற்கான கொள்கை உள்ளீடுகளை ஒருங்கிணைத்து வழங்குதல் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் தலைமையகம் முக்கியப் பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப மேலாண்மை, தகவல் உத்தரவாதம், விண்வெளி சொத்துக்களைப் பயன்படுத்துதல், பாதுகாப்பு உளவுத்துறையை வலுப்படுத்துதல், ராணுவ உறவுகளை மேம்படுத்துதல் ஆகியவை அச்சுறுத்தல்களுக்கான கூட்டுத் திட்டங்களைத் தயாரிப்பதில் பாதுகாப்புப் படைகளின் முயற்சிகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் தலைமையகம் முக்கியமானது.
நட்பு நாடுகளுடன் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் தலைமையகம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது; பல்வேறு நாடுகளில் 18 புதிய பாதுகாப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஐந்து புதிய பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளை சரி செய்ய ஏராளமான கூட்டு பணியாளர் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உயர் நிலையில் பாதுகாப்பை நிர்வகிப்பதற்கான நிறுவன கட்டமைப்பை வழங்குவதற்கும், நம்பகமான மற்றும் விரிவான தேசிய சக்தியின் தேடலில் முப்படைகள் மற்றும் பிற தொடர்புடைய கூறுகளை ஒருங்கிணைப்பதற்கும் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணியாளர் தலைமையகம் 2001, அக்டோபர் 01, அன்று உருவாக்கப்பட்டது. ‘கூட்டு முயற்சியின் மூலம் வெற்றி’ என்ற தனது குறிக்கோளுக்கு ஏற்ப, சேவைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டு முயற்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு முயற்சிகளில் இது முன்னணியில் உள்ளது.
திவாஹர்