கோல் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான சென்ட்ரல் கோல் ஃபீல்டு நிறுவனம், பயன்பாட்டில் இல்லாத நிலக்கரி சுரங்கக் குழிகளை மீன் வளர்ப்புப் பண்ணைகளாக மாற்றி வருகிறது. இயற்கை வளங்களை பொறுப்புள்ள வகையில் பயன்படுத்தி, உள்ளூர் பொருளாதாரம் மற்றும் உயிர்ப் பன்மையை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
மத்திய நிலக்கரி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்படும் இந்த செயற்கை மீன்வளர்ப்புத் திட்டத்தின் கீழ், ஜார்க்கண்ட் மாநிலம் அர்கடா பகுதியில் உள்ள ரெலிகரா, கிடி மற்றும் அம்மாநிலத்தில் உள்ள பொக்காரோ, பர்க்காசாயல், கர்கட்டா ஆகிய இட ங்களில் நிலக்கரி வெட்டியெடுக்கப்பட்ட பின் காலியபாக உள்ள சுரங்கக் குழிகளில் செயற்கை கூண்டு முறையில் கட்லா, திலேபியா, ரோகு, பங்காசியஸ் வகைகளைச் சேர்ந்த மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு நிலையான வருவாய் கிடைத்து நேரடி பலன் ஏற்படுவதுடன், உள்ளூர் பொருளாதாரமும் மேம்படும். அத்துடன் கிடி பகுதியில் உள்ள சுரங்க வளாகம், அதன் சுற்றுச்சூழல் முக்கியத்தும் கருதி ராம்சார் தளமாக அறிவிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திவாஹர்