நான்கு அம்ரித் மருந்தகங்களைத் திறக்கும் முதல் நிலக்கரி நிறுவனம் என்ற பெருமையை எஸ்இசிஎல் பெறுகிறது.

மலிவான, அனைவரும் எளிதில் அணுகக்கூடிய சுகாதார சேவையை வழங்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, கோல் இந்தியா நிறுவனத்தின்  துணை நிறுவனமான சௌத் ஈஸ்ட் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (எஸ்இ்சிஎல்), நாட்டின் 216-வது அம்ரித் (மலிவு விலை மருந்துகள், சிகிச்சைக்கான நம்பகமான உள்வைப்புகள் -AMRIT -Affordable Medicines and Reliable Implants for Treatment) மருந்தகத்தை திறந்துள்ளது. பிலாஸ்பூரின் எஸ்இசிஎல் இந்திரா விஹார் காலனியில் உள்ள சுகாதார மையத்தில் இது அமைந்துள்ளது. இந்த புதிய மருந்தகத்தின் மூலம் நான்கு அம்ரித் மருந்தகங்களை இயக்கும் முதல் நிலக்கரி நிறுவனமாக எஸ்இசிஎல் மாறியுள்ளது.

2015-ம் ஆண்டில் சுகாதார – குடும்ப நல அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட ஒரு முதன்மை முயற்சியின் ஒரு பகுதியான அம்ரித் மருந்தகங்கள், பரந்த அளவிலான பொதுவான மருந்துகள், உள்வைப்புகளை அதிக மானிய விலையில் வழங்குகின்றன. எஸ்இசிஎல்-ன் இந்த முன்முயற்சி அதன் ஊழியர்கள், பொது மக்கள், குறிப்பாக நிலக்கரி பகுதிக்குள் உள்ள பழங்குடி  கிராமப்புற மக்கள் உட்பட பலருக்குப் பயனளிக்கும். இந்த மருந்தகங்களின் விரிவாக்கம் மிகவும் பின்தங்கிய பிராந்தியங்களில் உள்ள சமூகங்களுக்கு மலிவு விலையில் மருந்துகளை எளிதாக வழங்குவதை உறுதி செய்யும்.

எஸ்இசிஎல் தலைமைப் பொது மேலாளர் டாக்டர் பிரேம் சாகர் மிஸ்ரா உள்ளடக்கிய வளர்ச்சிக்கான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.

Leave a Reply